வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (05/03/2018)

கடைசி தொடர்பு:18:57 (05/03/2018)

`கொஞ்சம்கூட தலைமைப்பண்பு இல்லை!’ - ஸ்டாலினைச் சாடும் ஜெயக்குமார்!

'தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்குக் கொஞ்சம்கூட தலைமைப் பண்பு, அதாவது `மெச்சூரிட்டி’ இல்லை' என்று அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார். 

ஜெயக்குமார்

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அ.தி.மு.க கட்சியினர் எந்த விஷயத்திலும் முந்திரிக்கொட்டைபோல் செயல்படுவதுமில்லை, கருத்து சொல்வதுமில்லை. ஆனால், ஸ்டாலினுக்குத் தலைமைப்பண்பில் பக்குவம் கொஞ்சம்கூட இல்லை.  ஸ்டாலினுக்குத் தலைமைப்பண்பு இல்லை என்பதற்கு, எடுத்துக்காட்டாக, காவிரி மேலாண்மை வாரியம், தொடர்பாகத் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அரசியல் கட்சியினர்கள் இடையே உள்ள மனவேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் அனைத்தையும் மறந்து, கட்சி வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, காவிரி மேலாண்மை குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதில், சொல்லப்படாத கருத்துகளை, சொன்னதாக மக்களிடம் ஸ்டாலின் தவறாகத் தெரிவித்து வருகிறார். எதிர் கருத்து தெரிவித்தால் முந்திரிக்கொட்டை என்பதா. இதுவே,  ஸ்டாலினிடம் தலைமைப் பண்பு இல்லை என எடுத்துக்காட்டுகிறது. ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டுமென்று பொதுமக்கள் விரும்பவில்லை; தி.மு.க தொண்டர்கள்தான் விரும்புகின்றனர்’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க