ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

வனத்துறை அதிகாரி மறைவிற்கு ஸ்டாலின் இரங்கல்!

கர்நாடகாவில் யானை தாக்கி  உயிரிழந்த தமிழக ஐ.எஃப்.எஸ். அதிகாரி மணிகண்டன் மறைவுக்கு தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Photo Credit: Facebook/Association For Biodiversity Conservation & Research

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த மணிகண்டன், கடந்த 2001-ம் ஆண்டு, முதல் ஐ.எஃப்.எஸ். அதிகாரியாகப் பணியாற்றி
வருகிறார். கர்நாடக மாநிலம் நாகரகொலெ புலிகள் காப்பகத்தில் முதன்மை வனப் பாதுகாவலராகவும், கள இயக்குநராகவும்
பணியாற்றி வந்தார். கபினி அணை அருகில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் அவர், தனது குழுவினருடன் ஈடுபட்டிருந்தபோது காட்டு யானை அவரைத் தாக்கியது. இதில், வனத்துறை அதிகாரி மணிகண்டன் படுகாயம் அடைந்தார்.

 மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது
மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் வனத்துறை அதிகாரி மணிகண்டன் மறைவுக்கு தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், `கர்நாடக மாநிலம் நாகரகொலே புலிகள் காப்பகத்தின் இயக்குநராகப் பணியாற்றி வந்த தமிழக ஐ.எஃப்.எஸ். அதிகாரி மணிகண்டன், காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த செய்தி கேட்டு பெருந்துயரமுற்றேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்’ எனத் தெரிவித்துள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!