13 நாள்களுக்குப் பிறகு விழுப்புரம் ஆராயி வழக்கில் போலீஸ் முக்கிய அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டம், வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராயி குடும்பத்தைத் தாக்கியவர்கள் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

விழுப்புரம் ஆராயி

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி. கணவரை இழந்தவரான இவர், தன் 14 வயது இளைய மகள் தனம் மற்றும் 8 வயது மகன் சமயனுடன் வெள்ளம்புத்தூரில் வசித்து வந்தார். கடந்த 21-ம் தேதி ஆராயி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அவரையும் தனம் மற்றும் சமயனையும் கொடூரமாகத் தாக்கினர். அதில் சிறுவன் சமயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட ஆராயியும், தனமும் சுய நினைவின்றி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடைபெற்று 10 நாள்களைக் கடந்த நிலையிலும் குற்றவாளிகளைப் பற்றி எந்தத் தகவலும் தெரியாததால், அவர்களைக் கைது செய்ய முடியாமல் திணறி வருகிறது காவல்துறை.

மேலும் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்களும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் குற்றவாளிகளைப் பற்றித் தகவல் அளிப்பவர்களுக்குத் தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று மாவட்டக் காவல்துறை எஸ்.பி ஜெயக்குமார் அறிவித்துள்ளார். அதேபோல குற்றவாளிகளைப் பற்றித் தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!