Published:Updated:

`தயார்நிலையில் 1,183 குழுக்கள்!’ - தஞ்சையில் தீவிரமாகும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

தஞ்சாவூர் பெரியகோயில்
தஞ்சாவூர் பெரியகோயில்

வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வந்த நபர்களைக் கண்காணித்து அவர்களின் உடல் நிலை குறித்த தகவலை மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் கொரோனா பரவாமல் தடுக்கின்ற வகையில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை கண்காணிக்கவும், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ரேஷன் கடைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய வகையில் 1,183 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார்.

தஞ்சாவூர் பெரியகோயில்
தஞ்சாவூர் பெரியகோயில்

உலகம் முழுவதும் அச்சுறுத்திக்கொண்டிருந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசும் கொரோனாவைத் தடுப்பதற்காக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக இன்று மாலை 6 மணிக்குப் பிறகு வரும் ஏப்ரல் 1-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவ், மாவட்டம் முழுவதும் கொரோனாவைத் தடுக்க 1,183 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அதிகாரிகள் தலைமையில் 15 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் பெரியகோயில்
தஞ்சாவூர் பெரியகோயில்

இது குறித்து கலெக்டர் கோவிந்தராவ் கூறியதாவது, ``தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கொரோனா பரவாமல் தடுக்கும் விதமாக பல்வேறு செயல்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ரேஷன் கடையையும் அடிப்படையாகக் கொண்டு செயல்படும் வகையில் 1,183 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வந்த நபர்களைக் கண்காணித்து அவர்களின் உடல் நிலை குறித்த தகவலை மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள், சுகாதார அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ரேஷன் கடை பணியாளர்கள் உள்ளிட்ட பலரைக் கொண்டு இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

`தொற்றுநோய் தடுப்புச் சட்டம்; ஓராண்டு சிறைத்தண்டனை!'-கொரோனா விவகாரத்தில் கொதித்த முதல்வர் நாராயணசாமி

இவர்கள் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வந்த நபர்களைக் கண்காணித்து அவர்களின் உடல்நிலை குறித்த தகவலை மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதேபோல் பொதுமக்களிடம் கொரோனாவிலிருந்து காக்கக்கூடிய வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். குழுக்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க நகராட்சி ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவர்கள் உள்ளிட்டவர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு