வெளிநாட்டுப் பணம் எப்படி வந்தது? - சுப.உதயகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன்

அணுஉலையால் கிராமப் பகுதிக்கு ஆபத்து ஏற்படும். எனவே, அணுஉலைகளை மூட வேண்டும் எனக் கூறி, நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் சில ஆண்டுகளுக்கு முன் போராட்டம் நடைபெற்றது. அணு உலைக்கு எதிராக  நடந்த இப்போராட்டத்தின் காரணகர்த்தா, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளராக அறியப்படுபவர்,  சுப.உதயக்குமார். 

சுப.உதயகுமார்

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இவரது போராட்டம், இந்தியாவை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் திரும்பிப்பார்க்க வைத்தது. அரசுக்கு எதிரான இவரது போராட்டம், ஒருகட்டத்தில் வீரியமடைந்தாலும், பின்னாளில் அவரது போராட்டத்தை அரசு முடக்கியது. எனினும், அணுஉலைகளுக்கு எதிரான போராட்டத்தை சுப.உதயகுமார் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார். முன்னதாக போராட்டக் காலத்தின்போது, வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெறுவதாகக் கூறி, இவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. 

மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், 'இந்த வழக்கில் ஆஜராக வேண்டும்' என உதயகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், நாளை காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 'ஆஜராகும்போது, தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்' எனவும் அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!