`விழுப்புரம் ஆராயி குடும்பத்துக்கு நீதி வேண்டும்' - 3 வது நாளாக பெண்கள் உண்ணாவிரதம் | Justice for Villupuram Aarayi: Women continues their hunger strike for the 3rd day

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (05/03/2018)

கடைசி தொடர்பு:10:32 (08/03/2018)

`விழுப்புரம் ஆராயி குடும்பத்துக்கு நீதி வேண்டும்' - 3 வது நாளாக பெண்கள் உண்ணாவிரதம்

விழுப்புரம் ஆராயி குடும்பத்தைத் தாக்கிய குற்றவாளிகளை உடனே கைதுசெய்ய வலியுறுத்தி, மூன்றாவது நாளாக இன்று வெள்ளம்புத்தூர் கிராமப் பெண்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்

விழுப்புரம் ஆராயி

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர், ஆராயி. கணவரை இழந்தவரான ஆராயி,  தன் 14 வயது இளைய மகள் தனம் மற்றும் 8 வயது மகன் சமயனுடன் வெள்ளம்புத்தூரில் வசித்துவந்தார். கடந்த 21-ம் தேதி, ஆராயி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அவரையும் தனம் மற்றும் சமயனையும் கொடூரமாகத் தாக்கினர். அதில், சிறுவன் சமயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட, மற்ற இருவரும் சுயநினைவின்றி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். சம்பவம் நடைபெற்று 10 நாள்கள் கடந்த நிலையிலும் குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை.

விழுப்புரம் ஆராயி

அதையடுத்து, வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், குற்றவாளிகளைக் கைதுசெய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போலீஸிடம் அனுமதி கேட்டனர். ஆனால், போலீஸ் அதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. அதனால், குற்றவாளிகளை உடனே கைதுசெய்ய வேண்டும் என்றும், வெள்ளம்புத்தூர் கிராமப் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி,  கடந்த 3-ம் தேதி தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாததால், மூன்றாவது நாளான இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க