வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (05/03/2018)

கடைசி தொடர்பு:18:40 (05/03/2018)

சொத்துக்குவிப்பு வழக்கில் சி.பி.ஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார் தினகரனின் சகோதரி!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள டி.டி.வி. தினகரனின் தங்கை, நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

டிடிவி தினகரன்

ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ-வான டி.டி.வி.தினகரனின் தங்கை ஸ்ரீதளா தேவி. சசிகலாவின் ஒரே மருமகளாகிய  இவருக்கும், பாஸ்கர் என்பவருக்கும் கடந்த 1990-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பாஸ்கர், ரிசர்வ் வங்கியில் பணியாற்றியவர். ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்தபோது, இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்படுகிறது. பாஸ்கர் வேலைக்குச் சேரும்போது, அவரது வங்கிக் கணக்கில் இருந்த தொகையும், சோதனை நடத்தியபோது காட்டப்பட்ட தொகையும் அதிகமாக இருக்கவே, இவர்மீதும், ஸ்ரீதளா தேவி மீதும் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது.  பின்னர், இவர்கள் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதால், கடந்த 2008-ம் ஆண்டு, தினகரனின் தங்கை ஸ்ரீதளாதேவிக்கு 3 ஆண்டு சிறையும், ரூ.10 லட்சம் அபராதமும், ஸ்ரீதளாதேவியின் கணவர் பாஸ்கருக்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ.20 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 

தீர்ப்பை எதிர்த்து, இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்தனர். வழக்கை  விசாரித்த உயர் நீதிமன்றம், சி.பி.ஐ நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிசெய்ததுடன், இருவரையும் சரணடைய  உத்தரவிட்டது. ஆனால், இருவரும் ஜாமின் கோரி மனுத் தாக்கல்செய்தனர். ஜாமினுக்கு சி.பி.ஐ மறுப்பு தெரிவிக்கவே, இருவரும் இன்று சி.பி.ஐ நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். ஏற்கெனவே, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் உள்ளார். இதேபோல, சசிகலாவின் கணவர் நடராஜனும் வெளிநாட்டு கார் வழக்கில் தண்டனைபெற்றுள்ளார். உடல்நிலை சரியில்லாததால், ஜாமின் பெற்று வெளியே உள்ளார். இந்நிலையில், சசிகலாவின் குடும்பத்திலி  ருந்து மேலும் இருவர் சிறைக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க