Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

சூர்யா - செல்வராகவனின் 'N G K'னா என்ன தெரியுமா..? #NGK

`அருவி', 'தீரன்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் திரைப்படத்துக்கு' என்.ஜி.கே' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. என்.ஜி.கே என்றால் என்ன என்பது சமூக வலைதளங்களில் பெரிய கேள்வி சுற்றலில் உள்ளது. ஒருவேளை இது சூர்யாவின் கதாபாத்திரமான 'நந்தகோபாலன் குமரன்' என்ற பெயரின் முதல் எழுத்துகளே என்.ஜி.கே-வாக இருக்கலாம் எனக் கோலிவுட்டில் கூறப்படுகிறது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகின்றனர். சூர்யாவுடன் செல்வராகவன் இணையும் முதல் படம் இது என்பதால், இப்படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பும் பரபரப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. ரசிகர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சியாய், இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சென்னையில் பிரமாண்ட அரங்கு அமைத்து படப்பிடிப்பை படக்குழு மேற்கொண்டு வருகிறார்கள்.  இத்திரைப்படத்துக்கு 'சூர்யா 36' என்ற ஹாஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாய் இந்த டைட்டில் அனைவரது எதிர்பார்புக்குரியதாக இருந்தது. இயக்குநர் செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை சூர்யா தனது ட்விட்டரில் இன்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

என் ஜி கே / சூர்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement