``வனவிலங்குகளுக்கு உணவு வழங்காதீர்!'' - பொதுமக்களுக்கு அறிவுறுத்திய வனத்துறை

தகை, முதுமலை, கல்லட்டி வனப்பகுதி வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் குரங்குகளுக்கு உணவு பொருள்கள் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கல்லாரில் மனிதச்சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

வனவிலங்குகள் தினம்

கோவை மாவட்டம் கல்லார் முதல் கூடலூர் முதுமலை சாலை போக்குவரத்து நெருக்கடி மிகுந்தது. இந்த மலைப்பாதையில் சாதாரண வகை குரங்குகள், லங்கூர் இன குரங்குகள் அதிக அளவில் உள்ளன. மலைப்பாதையில் கூட்டம் கூட்டமாக அமைர்ந்துகொண்டிருக்கும். குரங்குகளைப் பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமிகுதியில் வாழைப்பழம், பிஸ்கட் போன்ற தின்பண்டங்கள் கொடுக்கின்றனர். இதனால், உணவு தேடி உண்ணும் பழக்கத்தைக் குரங்குகள் மறந்துவிடும் சூழல் உருவாகியுள்ளது. பிளாஸ்டிக் பைகளையும் வனத்துக்குள் வீசுவதால், அதை உண்ணும் காட்டு மாடுகள், குரங்குகள், யானைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாகனங்களைக் கண்டதும் சாப்பிட ஏதாவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் அதை நோக்கி ஓடிவரும் குரங்குகள் விபத்தில் சிக்கியும் உயிரிழக்கின்றன.

வன விலங்குகள் தினம்

மார்ச் 3-ம் தேதி உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் கல்லாரில்  உதகை மலைப்பாதையில் செல்லும் சுற்றுலாப் பயணிகளிடம் வனவிலங்குகளைக் காப்பதன் அவசியத்தை வலியுறுத்தி  விழிப்பு உணர்வு நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட வனத்துறை, கோவை வன உயிர் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை, ரத்தினம் கல்லூரி, ZF நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. மனிதச் சங்கிலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. வனப் பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனமாகவும் வன உயிரினங்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்படுத்தாமல் வாகனங்களை இயக்க வேண்டும். வன உயிரினங்களுக்கு உணவு கொடுக்கக் கூடாது பிளாஸ்டிக் பைகள், மதுபான பாட்டில்களையும் வனப் பகுதிக்குல் வீசக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். 

வன விலங்குகள் தினம்

கோவை மாவட்ட வன அலுவலர் என்.சதீஷ், கெளரவ வன உயிரின காப்பாளர்கள் பத்ரசாமி, சாதிக் அலி உதகை மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ்,  ரத்தினம் கல்லூரி உதவி பேராசிரியர் பண்பு செல்வன் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிராஜ்தீன், ஜெனோ ஆகியேர் பங்கேற்றனர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!