வெளியிடப்பட்ட நேரம்: 20:13 (05/03/2018)

கடைசி தொடர்பு:20:13 (05/03/2018)

'விஜய் 62' படத்தில் இணைந்த வரலட்சுமி சரத்குமார்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'மெர்சல்' படத்தைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவருகிறார். இந்தப் படத்திற்காக விஜய் எடுத்த போட்டோ ஷூட், இணையத்தில் செம வைரல் ஆனது. அதன்பிறகு, படத்தின் படப்பிடிப்பை விஜய் க்ளாப் அடித்துத் துவக்கி, புகைப்படமும் அதைத் தொடர்ந்து வெளியான சண்டைக் காட்சிகளும் இணையத்தைக் கலக்கின.

வரலட்சுமி சரத்குமார்

'பைரவா' படத்திற்குப் பிறகு, கீர்த்தி சுரேஷும் விஜய்யும் ஜோடியாக நடிக்கின்றனர். இந்நிலையில், வரலட்சுமி சரத்குமார் இந்தப் படத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிப்பதால், இவர் நெகட்டிவ் ரோலில் நடிக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுபோக, ராதாரவியும், யோகிபாபுவும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும், ஏ.ஆர். ரஹ்மானின் இசை, கிரீஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு, ஶ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு எனப் பல வெற்றிப் படங்களின் கூட்டணி இந்தப் படத்திலும் இருப்பதால், வரும் தீபாவளி விஜய் ரசிகர்களுக்கு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க