'பெண்களை அடிமைபோல நடத்தக் கூடாது' - வரலட்சுமி!

சர்வதேச மகளிர் தினத்தை (மார்ச்-8) முன்னிட்டு வியாசர்பாடியில் இன்று, வரலட்சுமி சரத்குமார் ரத்ததான முகாம் நடத்தினார். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டு ரத்ததானம் அளித்தனர். குறிப்பாக, வட சென்னையிலிருந்தே இதைத் துவங்க வேண்டும் என்றும், அதன்பின் சென்னையின் பிற இடங்களுக்கும் இந்த ரத்ததான முகாம் அமைக்கப்படும் என்றும் அவர் நிகழ்ச்சியில் தெரிவித்தார். 

வரலட்சுமி

இதில் சமுதாயத்தில் பெண்களின் பங்குகுறித்தும், முக்கியத்துவம்குறித்தும் வரலட்சுமி பேசியபோது, 'இன்று என் பிறந்தநாளை முன்னிட்டு இப்படியான நற்காரியங்களில் ஈடுபடுவதை எண்ணி நான் பெருமையடைகிறேன். பெண்களுக்கு எப்போதும் குரல் கொடுப்பதையே என் நோக்கமாகக் கொண்டிருக்கிறேன். நம் வீட்டு ஆண்களுக்கு பெண்களை எப்படி நடத்துவது என்பதனை முதலில் கற்றுக்கொடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் பெண்களை அடிமைபோல நடத்தக் கூடாது. எல்லாவற்றுக்கும் பணிந்துபோகாமல், நியாயமான சமயங்களில் தங்களது குரலை வெளிப்படுத்த வேண்டும்" என்று கூறினார். 

வரலட்சுமி

மேலும், அங்கு வந்த பெண்களுக்கு இலவச குடையும், புடவையும் வழங்கப்பட்டது. கூட்டத்தில் இருந்த மூன்று பேருக்கும் இலவச சைக்கிளும் வழங்கப்பட்டது. இத்துடன், அவரும் ரத்ததானம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!