வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (06/03/2018)

கடைசி தொடர்பு:04:00 (06/03/2018)

மதுரையில் நடுரோட்டில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு..!

மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணை நடுரோட்டில் வைத்து வெட்டி சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரையில் ஜெய்ஹிந்த்புரம் செல்லும் வழியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செல்போனை பறிக்க வந்தவரிடம் எதிர்த்து போராடிய பெண்ணை  அரிவாளால் வெட்டி சென்றுள்ளான். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் நடந்து சென்ற முத்துலட்சுமி(35)யிடம் செல்போனை பறிக்க ஒருவன்  முயற்சி செய்துள்ளான். செல்போனை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த நபர் முத்துலட்சுமியை அரிவாளால் வெட்டியுள்ளான். அரிவாள் வெட்டில் காயமடைந்த முத்துலட்சுமி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெட்டிய நபரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து அடித்து ஜெய்ஹிந்த் புரன் காவல்துறையில் ஒப்படைத்தனர். காவல்துறை விசாரணையில் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக செல்போனை பறிக்க வந்த நபர் ஆட்டோ டிரைவர் சந்திரசேகர் என்பதும் தெரியவந்துள்ளது பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெண்ணை அரிவாளால் வெட்டியச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.