''பன்றிக் காய்ச்சல்... ரத்தப் பரிசோதனைக் குழப்பத்தில் ராஜஸ்தான் கவர்னர்!’’

kalyansingh

பா.ஜ.க மூத்த தலைவர் கல்யாண் சிங். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். இப்போது அவர், ராஜஸ்தான் மாநில கவர்னராக உள்ளார். சமீபகாலமாக, உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் அவருடைய ரத்தம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில், அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், இந்த ஆய்வு முடிவை உறுதி செய்ய, டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது, பன்றிக் காய்ச்சல் இல்லை என்று அந்த மருத்துவமனை அறிக்கை கொடுத்தது.

இதையடுத்து, ஜெய்ப்பூரில் மீண்டும், அவருக்கு ஏற்கெனவே ரத்த பரிசோதனை செய்த அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போதும், 'பன்றிக் காய்ச்சல்' இருப்பது ரத்த பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இத்தககவலை ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் காளிச்சரண் சரப் தெரிவித்துள்ளார். ஆனாலும், கவர்னர் கல்யாண் சிங் குழப்ப நிலையில் இருப்பதாகவே அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!