Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

3 நாள்களில் 1,000 வன்முறைகள்! நிறம் மாறும் திரிபுரா

திரிபுராவில் சிலை அரசியல் தொடங்கியுள்ள நிலையில், அதை அகற்றிய புல்டோஸர் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

திரிபுரா லெனின் சிலை அகற்றம்

திரிபுரா சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி மார்ச் 8-ம் தேதி புதிய அரசு அமைக்கவுள்ள நிலையில், பெலோனியா நகரில் நிறுவப்பட்டிருந்த லெனின் சிலை நேற்று அகற்றப்பட்டது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் சுப்ரதா சக்கரவர்த்தி கூறுகையில், ''பெலோனிய நகர மக்கள் விவேகானந்தர், வல்லபாய் படேல், அன்னை தெரசா போன்றவர்களின் சிலையை நிறுவ விரும்பினர்'' எனத் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தத்கதா ராய், ''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு செய்யாததை இன்னோர் அரசு செய்யும். அடுத்த அரசு அமையும்போது, அந்த அரசு விரும்பியதைச் செய்யும்'' என்று ட்வீட் பதிவிட்டுள்ளார். போலீஸ் தரப்போ, ''பாரதிய ஜனதா வெற்றி ஊர்வலத்தின்போது, ஒரு கும்பல் சிலையை அகற்றியதாகச் சொல்கிறது. திடீரென்று அந்த இடத்தில் புல்டோசர் எப்படி வந்தது என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. சுமன் மஜும்தார் என்பவரிடம் உதய்பூரைச் சேர்ந்த ஆஷிஷ்பால் என்பவர் புல்டோசரை வாடகைக்கு எடுத்துள்ளார். இதனால் சிலை அகற்றப்பட்டது திட்டமிட்ட செயலாகவே பார்க்கப்படுகிறது. 

''கடந்த 3 நாள்களில் 1,000 வன்முறைச் சம்பவங்களில் 514 சி.பி.எம் தொண்டர்கள் காயமடைந்துள்ளதாகவும். 196 வீடுகள், 64 கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன'' என்று சி.பி.எம் கட்சியின் திரிபுரா மாநிலச் செயலாளர் பிஜன்தர் கூறியுள்ளார். சுமார், 25 ஆண்டுகளாகத் திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தது. தெருக்களுக்கும் கம்யூனிஸ்ட் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தெருக்களின் பெயர்களும் விரைவில் மாற்றப்படுமாம். 

இது குறித்து திரிபுரா மாநில பாரதிய ஜனதா கட்சி ஒருங்கிணைப்பாளர் சுனில் தியோகர் கூறுகையில்,''பள்ளி பாடப்புத்தகங்களில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பற்றிய பாடங்களுக்குப் பதிலாக இந்தியத் தலைவர்கள் பற்றிய பாடங்கள் சேர்க்கப்படும். கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்போவதில்லை. இந்தியத் தலைவர்களைப் பற்றி பாடங்களை நீக்கிவிட்டுதான் இடதுசாரி அரசு 9-ம் வகுப்பு வரலாறு பாடத்தில் ரஷ்ய புரட்சி, பிரெஞ்சு புரட்சி பற்றிய பாடங்களைச் சேர்த்தது. அகர்தலாவில் முதல்வர், அமைச்சர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதி 'மார்க்ஸ் ' பெயரில் உள்ளது. விரைவில் அதுவும் மாற்றப்படும் '' என்று கூறியுள்ளார். 

பாரதிய ஜனதா கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியில், அகர்தலா விமான நிலையத்துக்கு திரிபுரா கடைசி மன்னர் பிர் பிக்ரம் கிஷோர் மாணிக் தெப் பர்மன் என்று பெயர் சூட்டுவதாக உறுதி அளித்திருந்தது. அந்த வகையில், அகர்தலா விமான நிலையத்துக்கு இந்தப் பெயர் சூட்டப்படவிருக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement