வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (06/03/2018)

கடைசி தொடர்பு:17:20 (06/03/2018)

சிக்கவைத்த போலி ஆவணங்கள்! - பல லட்சங்களை மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள்!

ஸ்டேட் பேங்க் கிளைகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்க போலி ஆவணங்கள் மூலம் 64 லட்சம் மோசடி செய்த வங்கி அதிகாரி உள்ளிட்ட 7 பேர்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்பிஐ வங்கி ஊழியர்கள்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே அசாவீரன் குடிக்காடு மற்றும் வரதராஜன் பேட்டை கிராமத்தில் செயல்பட்டுவரும் எஸ்.பி.ஐ கிளைகளில் கடந்த 2011 - 12 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்கியதாகப் போலி ஆவணங்கள் மூலம் 64 லட்சம் மோசடி செய்துள்ளதாக, கிளைகளின் மேலாளர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.அதேபோல் இன்னும் பலர் போலி ஆவணங்களைக் கொடுத்து வங்கியில் கடன் பெற்றிருக்கிறார்கள், அவற்றையும் முழுமையாக விசாரித்துக்கொண்டிருக்கிறோம்'' என்றனர்.

எஸ்பிஐ வங்கி ஊழியர்கள்

இதன் பேரில் அசாவீரன் குடிக்காடு கிளை கிராம கடன் வசூல் அலுவலர் பிரதீப்,எஸ்பிஐ வங்கி மேலாளர் ராஜேந்திரன், கிளர்க்கு மதன்  உள்ளிட்ட 6 பேர் மற்றும் வரதராஜன்பேட்டை கிளையில் 30 விவசாயிகளுக்கு ரூ.24 லட்சம் கடன் வழங்கியதாக மோசடியில் ஈடுபட்ட கிராம கடன் வசூல் அலுவலர் பழனிசாமி ஆகியோர்மீதும் மாவட்டக்  குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவானவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.