வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (06/03/2018)

கடைசி தொடர்பு:18:45 (06/03/2018)

காதலனைச் சுட்டுக்கொன்ற கொள்ளையனால் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

காதலியின் கண்முன் காதலன், அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், மகாராஷ்ட்ரா மாநிலம் தானே பகுதியில் உள்ள கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.

தானே மாவட்டத்தில் உள்ள நலிம்பி எனும் கிராமத்தில் வசித்து வருபவர் கணேஷ் டிங்கர். இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும், நேற்று (5.3.2018) கிராமத்தில் உள்ள குளக்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கு வந்துள்ளார். கையில் துப்பாக்கியுடன் வந்த அந்த மர்ம நபர், அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால், கணேஷ் டிங்கரும் அவர் காதலியும் பணம் கொடுக்க மறுத்ததாகத் தெரிகிறது. 

அதுமட்டுமின்றி, அந்த மர்ம நபர், அப்பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றிருக்கிறார். இதனால், ஆத்திரம் அடைந்த கணேஷ் டிங்கர், அந்த நபரை கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்தச் சண்டை ஒருகட்டத்தில் முற்ற, கணேஷ் டிங்கரை அந்த மர்ம நபர், தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதன்பின், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார். 

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தப்பிச்சென்ற நபரை விரைவில் பிடித்துவிடுவோம்'' என்றார்.