ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு நடந்த வளைகாப்பு!

திருவள்ளூர் அருகே, அரசு சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

வளைகாப்பு

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்று அரசு சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்ட பெண்கள் அனைவருக்கும் டாக்டர் மோனிகா, கன்னத்திலும் கைகளிலும் சந்தனம் தடவி, பன்னீர் தெளித்து, மலர் தூவி ஆசிர்வதித்தார். 

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சம்பத் குமார், முன்னாள் எம்.எல்.ஏ., மணிமாறன் ஆகியோரும் பெண்களுக்கு சந்தனம் தடவி வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் பேசிய டாக்டர்கள், கர்ப்பிணிப்பெண்கள் சந்தோஷத்துடன் சத்தான காய்கறிகளை சாப்பிட்டால், பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்கும் என்றனர். விழாவில் அ.தி.மு.க-வினர் பலர் கலந்துகொண்டனர். அரசு சார்பில் நடைபெற்ற இந்த வளைகாப்பு நிகழ்ச்சியைக் கிராம மக்களே வியந்து பார்த்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!