வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (06/03/2018)

கடைசி தொடர்பு:23:30 (06/03/2018)

அஜித் பட ஸ்டைலில் பட விழாவிற்கு வந்த நடிகை

தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துவரும் சாய்பல்லவி, இயக்குநர் விஜய் இயக்கத்தில் தமிழில் அறிமுகமாகும் திரைப்படம், 'கரு'. இப்படம், தெலுங்கில் 'கனம்' என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்தப் படக் குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியொன்று ஹைதராபாத்தில் நேற்று (05/03/18) மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கரு

 

 ஹோட்டலிலிருந்து காரில் கிளம்பிய சாய் பல்லவி, ஹைதராபாத் நகரின் மாலை நேர டிராஃபிக்கில் சிக்கிக்கொண்டார்.  'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் வரும் கதாநாயகி நந்தினி வர்மா கதாபாத்திரம் செய்வதுபோல, கால தாமதத்தைத் தவிர்க்க, தனது உதவியாளரின் பைக்கில் விழா நடக்கும் இடத்தை அடைந்துள்ளார்.  அவசர அவசரமாக விழாவிற்கு வந்த சாய் பல்லவி, கால தாமதத்திற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார். இது, அங்கிருந்த டோலிவுட் மக்களுக்கு புதிதான ஒன்றாய் இருந்தது.

சாய் பல்லவி