பத்து நாள்களாக அநாதையாக நிற்கும் கார் - கண்டுகொள்ளாத போலீஸ்!

திருவள்ளூர் அருகே பத்து நாள்களாக கேட்பாரற்ற நிலையில் கார் ஒன்று நின்றுகொண்டிருக்கிறது. இதனால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கார்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ளது வள்ளியம்மாபுரம் கிராமம். இந்தக் கிராமத்தில், கடந்த பத்து நாள்களாக சாலையின் ஓரத்தில் புத்தம் புதிய டாடா இன்டிகா கார் ஒன்று நின்றுகொண்டிருக்கிறது. கிராம மக்கள் அனைவரும் தினமும் அந்த காரைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை யாரும் அந்த காரை தேடி வரவில்லை. 

அந்த கார் யாருடையது என்றும் தெரியவில்லை. இது தொடர்பாக போலீஸில் யாரும் புகார் கொடுக்கவில்லை. இதனால், அந்த கார் கடத்தி வரப்பட்டதா அல்லது கூலிப்படையினர் யாராவது பயன்படுத்தியதா என்பதுகுறித்த தகவல் இல்லாமல் இருந்துவருகிறது. திருத்தணி போலீஸாரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனால், அந்தப் பகுதி மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!