வேலூரில் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்திய பா.ஜ.க பிரமுகருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில், தந்தை பெரியார்  சிலையை உடைத்ததாக பா.ஜ.க பிரமுகர் முத்துராமனை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.

பெரியார்

தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையைத் தகர்ப்போம் என பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச். ராஜா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, 'களவாணிகளைப் போல இரவில் உடைக்காமல் பகலில் நேரம் குறித்துவிட்டு வாருங்கள். கை கால்களை துண்டாக்குவோம்' என எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை  பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள்  இரவில் உடைத்துள்ளனர். திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை  பா.ஜ.க நகரச் செயலாளர் முத்துராமன் மற்றும் பிரான்சிஸ் ஆகியோர் கல் எறிந்து பெரியார் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். அதைப் பார்த்தவர்கள் தடுக்க முற்பட்டபோது, அவர்களையும் அடித்தாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள், முத்துராமனுக்கு தர்ம அடி கொடுத்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் இருவரையும் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!