வெளியிடப்பட்ட நேரம்: 09:17 (07/03/2018)

கடைசி தொடர்பு:09:32 (07/03/2018)

’அந்தப் பதிவை நான் போடவில்லை!’ - பெரியார் சிலை விவகாரத்தில் ஹெச்.ராஜா வருத்தம்

ஹெச்.ராஜா

'பெரியார் சிலை அகற்றுமாறு நான் பதிவிடவில்லை; ஃபேஸ்புக் அட்மின்தான் பதிவு செய்தார்' என ஹெச்.ராஜா முகநூலில் பதிவு செய்துள்ளார்.

ஹெச்.ராஜா இன்று காலை தன்னுடைய முகநூல் பக்கத்தில், 'திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே.ராமசாமி சிலை' எனப் பதிவிட்டிருந்தார். ஹெச்.ராஜாவின் பதிவு தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள் ஹெச்.ராஜாவின் கருத்தைக் கடுமையாக விமர்சித்த நிலையில் பெரியார் சிலை பற்றிய பதிவு ஹெச்.ராஜா  ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. 

இந்நிலையில் ஹெச்.ராஜா இதுகுறித்து பகிர்ந்துள்ள ஃபேஸ்புக் பதிவில்,

’நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அவர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூலை Admin என் அனுமதி இன்றி பதிந்துள்ளார். எனவேதான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன்.  கருத்துகளை கருத்துகளால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே, இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதயப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல. 
ஆகவே ஆக்கப்பூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இணைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டிய நேரமிது’ என்று பதிவு செய்துள்ளார். 

பெரியார் சிலை

நீங்க எப்படி பீல் பண்றீங்க