வெளியிடப்பட்ட நேரம்: 11:52 (07/03/2018)

கடைசி தொடர்பு:11:52 (07/03/2018)

ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராமில் ரஜினிகாந்த்!

ரஜினி

சமீபத்தில் நடந்த எம்.ஜி.ஆர் சிலை திறப்பு கூட்டத்தைத் தன் அரசியல் பிரவேசத்தின் முதல் மேடையாய் மாற்றிக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், இன்று அனைத்து ஊடகங்களிலும் பிரதான விவாதப் பொருளாக மாறியுள்ளார். இந்நிலையில், அவ்வப்போது தன்  ட்விட்டர் பக்கத்தை உபயோகித்துவரும் ரஜினி, தற்போது இதர சமூக வலைதளங்களான  ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் கணக்கைத் தொடங்கியுள்ளார்.

ரஜினிகாந்த்

 அரசியலில் இறங்கும் முடிவுக்குப் பிறகு, ரஜினி வலைதளம் ஆரம்பித்தார். 'காலா', '2.0' உள்ளிட்ட படங்களுக்காக மட்டுமல்லாமல், அரசியலுக்கும் உதவுமென ரஜினி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க இம்முடிவை எடுத்துள்ளார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது முதல் பதிவாக, "வணக்கம், வந்துட்டேன்னு சொல்லு" என்று இன்ஸ்டாகிராமில் ரஜினிகாந்த் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.