`அட்மினையும் நீக்கி விட்டேன்..!’ - டெல்லியில் ஹெச்.ராஜா விளக்கம்

’திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டிருக்கிறது, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே.ராமசாமி சிலை உடைக்கப்படும்' என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார் ஹெச்.ராஜா. 

ஹெச்.ராஜா

இதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பொதுமக்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், சிலை உடைப்புச் சம்பவங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி, தனது அதிருப்தியினை வெளிப்படுத்தினார். இதுமட்டுமின்றி, ஹெச்.ராஜாவின் உருவப்படம் எரிப்பு, போன்ற வன்முறைகள் தமிழகமெங்கும் நடந்து வருகிறது. 

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச் ராஜா, இதுகுறித்து விளக்கம் அளித்துப் பேசியுள்ளார். அதில், நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈ.வே.ராமசாமி சிலை உடைக்கப்படும் என்ற பதிவை, எனது அனுமதியின்றி, என் முகநூல் அட்மின் பதிவு செய்துவிட்டார். இந்தப் பதிவு எனக்கு ஏற்புடையது அல்ல. இந்தப் பதிவை பார்த்தவுடனே நீக்கம் செய்துவிட்டேன். அதுமட்டுமல்லாமல், எனது அனுமதியின்றி பதிவிட்ட அட்மினையும் நீக்கி விட்டேன் என்றார். 

மேலும், கருத்துகளைக் கருத்துகளால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே. இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதயப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

ஈ.வெ.ரா., அவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல. ஆகவே ஆக்கப்பூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இணைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டிய நேரமிது என்று செய்தியாளர்களிடம் பேசினார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!