வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (07/03/2018)

கடைசி தொடர்பு:14:45 (07/03/2018)

`கஞ்சா வசதியை நான் செய்து தருகிறேன்!' - லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கிய புழல் சிறைக் காவலர்

புழல்

சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளிடமும், அவர்களின் உறவினர்களிடமும் லஞ்சம் வாங்கிய காவலர் பிச்சைக்கண்ணுவை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்துள்ளனர்.

புழல் மத்திய சிறையில் உள்ள கைதிகளிடம் அங்கிருக்கும் காவலர்கள் லஞ்சம் வாங்குவதாக வந்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று இரவு திடீரென சிறை வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவலர் பிச்சைக்கண்ணு என்பவர் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா உள்ளிட்ட வசதிகள் செய்து தருவதாகக் கூறி அவர்களிடமும், கைதிகளின் உறவினர்களிடமும் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது

இதையடுத்து பிச்சைக்கண்ணுவை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாயையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.