8.63 லட்சம் மாணவர்கள் எழுதும் பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடங்கியது!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய இந்தத் தேர்வில், மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். 

பொதுத்தேர்வு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படும் பள்ளிகளில் படிக்கும் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ, மாணவியர் பிளஸ் 1 பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர். மேலும், 1753 தனித் தேர்வர்களும் பங்கேற்றுத் தேர்வு எழுதுகின்றனர். 

பிளஸ் 1 தேர்வு எழுதுவோருக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 407 பள்ளிகள்மூலம் 49 ஆயிரத்து 422 பேர் எழுதுகின்றனர். அவர்களுக்காக சென்னையில் 156 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கிய பொதுத்தேர்வில், மொத்தம் 42,927 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

பொதுத்தேர்வு

இதில் ஆண்கள் 20,188 பேர், பெண்கள் 22,739 பேர் ஆவர். மேலும், மாற்றுத்திறனாளி பிரிவில் பார்வையற்றோர் 33 மாணவர்கள் இன்று தேர்வு எழுதுகின்றனர். இன்று தொடங்கும் தேர்வு, ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. அரசு பொதுத்தேர்வு தொடர்பாக 1077என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!