சரணடையத் தயார்! - இந்தியாவுக்கு தாவூத் வைக்கும் முக்கிய நிபந்தனை

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம், சில நிபந்தனைகளுடன் இந்தியாவிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளார்.

 தாவூத் இப்ராஹிம்

நிழல் உலக தாதாவாக வலம் வந்துகொண்டிருக்கும் இவர், 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் மையக் கருவாகச் செயல்பட்டார். மேலும், இவர் மீதான பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் இந்தியாவில் நிலுவையில் உள்ளது. தற்போது வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் தாவூத், சில நிபந்தனைகளுடன் இந்தியா திரும்ப, விரும்புவதாக வழக்கறிஞர் ஷ்யாம் கேஷ்வானி தெரிவித்துள்ளார்.

தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் இப்ராஹிம் காஷ்கருக்காக, தானே  நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் வாதாடவரும் ஷ்யாம் கேஷ்வானி, செய்தியாளர்களிடம் இன்று (7.3.2018) தாவூத் இப்ராஹிமின் விருப்பம் குறித்து தெரிவித்தார். 

மேலும், அவர் பேசுகையில், சில முன் நிபந்தனைகளுடன் தாவூத் இந்தியாவிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, மும்பை ஆர்தர் சிறைச்சாலையில் மட்டும்தான் அடைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் வைத்துள்ளார் என்றார். மகாராஷ்ட்ரா சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் தாவூத் இப்ராஹிம் இந்தியா திரும்ப விரும்புவதாக அண்மையில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!