வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (07/03/2018)

கடைசி தொடர்பு:17:24 (07/03/2018)

மருத்துவமனையில் துரத்திய கொலையாளிகள்... தடுக்கிவிழுந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு நேர்ந்த கொடூரம்

புதுச்சேரி ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி ஆளுநர் மாளிகையைப் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கொலை

புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மாறன் (55). இவர் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அருகில் சொந்தமாக ஆம்புலன்ஸ்  வைத்து ஓட்டி வருகிறார். நேற்றிரவு இவர் செஞ்சி சாலையில் அரசு மருத்துவமனை பிணவறைக்கு அருகே இருக்கும் கழிவறை அருகில் நின்றுகொண்டிருந்தார். அப்போது  அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மாறனைத் துரத்தினர். உயிர் தப்பிக்க ஓடிய அவர் சிறிது தூரத்திலேயே சாலையில் தடுமாறி கீழே விழுந்தார். அதன் பின்னர், அந்த நபர்கள் மாறனை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. அதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து உடனே அங்கு சென்ற காவல்துறை மாறனின் உடலைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாறன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகக் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக மாறன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கொலை

இதற்கிடையில், மாறன் கொலை செய்யப்பட்ட இடததுக்கு வந்த அவர் மகன் மற்றும் நண்பர்கள் போலீஸாரின் வாகனத்தின்மீது ஏறி நின்று சேதப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களுக்கும் போலீஸூக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அவர்களை சமாதானப்படுத்தி வைத்தது போலீஸ். இந்நிலையில் மாறனைக் கொலை செய்த குற்றாவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வைத்திக்குப்பத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க