சென்னையில் அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு!

சென்னையில் அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெறவுள்ளது. திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம், அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறை மற்றும் அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவக்கல்லூரி தமிழ்த்துறை ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து 5 வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டை வரும் மார்ச் 8-ம் தேதியிலிருந்து 11-ம் தேதி வரை நான்கு நாள்கள் சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவக் கல்லூரியில் நடத்த உள்ளன. 

சைவ சித்தாந்த மாநாடு

நாளை (8.3.2018) காலை 10.30 மணியளவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். இந்த நான்கு நாள்கள் மாநாட்டில் சைவ ஆய்வுக் கட்டுரைகள், வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசம், சங்க இலக்கியம், திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் எனப் பல தலைப்புகளில் சொற்பொழிவுகளும் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. 

கவர்னர்

காஞ்சி மடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சைவ ஆதீன சந்நிதானங்கள், சமயப் பெரியவர்கள், வெளிநாடு வாழும் சைவ சமயத் தலைவர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். மாநாட்டின் இறுதி நாளில் (11.3.2018) தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டை வாழ்த்தி பேசவிருக்கிறார். ஆஸ்திரேலியா, சீனா, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், கனடா,  நைஜீரியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் வாழும் கருத்தாளர்கள் இந்த மாநாட்டில் உரை நிகழ்த்த உள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!