வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (08/03/2018)

கடைசி தொடர்பு:01:00 (08/03/2018)

'அசுரவதம்' டீஸரை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன் !

'கொடிவீரன்' படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நடித்திருக்கும் படம் 'அசுரவதம்'. இந்தப் படத்தை 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது'  படத்தை இயக்கிய மருதுபாண்டியன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதாநாயகியாக நந்திதா நடித்துள்ளார்.

அசுரவதம்

ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் மேனன் இசையமைத்திருக்கிறார். கத்தி, அரிவாள், முறுக்கு மீசை, வேட்டி சட்டை என கிராமத்து முகமாகவே திரிந்துகொண்டிருந்த சசிகுமார், 'அசுரவதம்' டீஸரில் புதிய பரிணாமத்தில் தெரிகிறார். இந்தப் படத்தின் டீஸரை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இத்திரைப்படம் வரும் ஏப்ரம் 13ம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கிறது.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க