காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக எம்.பி-க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் – திருமாவளவன் | If does not form the cauvery management board tamilnadu MP's must resigned - thirumavalavan

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (08/03/2018)

கடைசி தொடர்பு:02:00 (08/03/2018)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக எம்.பி-க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் – திருமாவளவன்

மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காதபட்சத்தில், டில்லியில் போராட்டம் நடத்தும் தமிழக எம்.பி-க்கள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவிக்க வேண்டும்" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

Thirumavalavan meet to press

நெல்லையில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, துாத்துக்குடி விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில்,  "மார்ச் மாதம், 30-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அந்த வாரியம் எவ்வாறு அமைய வேண்டும் எனத் தெளிவான வரையறையையும் வழங்கியுள்ளது. இதில் குழப்பத்திற்கே இடமில்லை.

இந்நிலையில் வாரியம் கூறித்து பேச, வரும் 9-ம் தேதி 4 மாநிலத் தலைமைச் செயலர்களும் கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு கலந்துகொள்ளக் கூடாது. அக்கூட்டத்தில் தீர்மானம் ஏதாவது நிறைவேற்றப்பட்டு, அது உச்ச நீதிமன்றத்தில்,‛அஃபிடவிட்டாக’ பதிவு செய்யப்பட்டால், மேலாண்மை வாரியம் அமைவதில் காலதாமதம் ஏற்படும்.

கர்நாடகாவின் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, பா.ஜ.க அரசு, வாரியம் அமைப்பதை தாமதப்படுத்த நினைக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை என்றால், பதவியை ராஜினமா செய்யப் போகிறோம் என, தமிழக எம்.பி.,கள் அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனும், பெரியார் குறித்து கலவரத்தை துாண்டும் வகையிலும் பேசியுள்ள ஹெச்.ராஜாவை, தமிழக அரசு கைது செய்திருக்க வேண்டும்.

தன் கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள, ராஜாவின் செயல் வரவேற்கத்தக்கது. தமிழகத்திற்குள் நுழைய,ஏதோ ஒரு திட்டத்தை மனதில் வைத்துதான் பா.ஜ.க., ஹெச். ராஜா மூலம் இப்படிச் செய்வதாக நான் கருதுகிறேன். நண்பர் ராஜா,  நாகரிகமான அரசியல் செய்யட்டும். இது போன்ற அவரது செயல், தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என, அதன் தலைமை உணர வேண்டும். மாணவர்களை அரசியலுக்கு வரவேண்டாம் என, சொல்லும் ரஜினி, அதை பின்னால் உணருவார் அவரே மாணவர் அமைப்பை தொடங்குவார்" எனத் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close