''இருளை நீக்கும் ஓளியாக  பெண்கள் உயர வேண்டும்..!'' முதல்வர் வாழ்த்து #womensday

 

முதல்வர்


''இருளை நீக்கும் ஒளிவிளக்காக பெண்கள் உலகில் உயர்ந்து விளங்கிட வேண்டும்''  என்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள உலக மகளிர் தின வாழ்த்தி செய்தியில், ''ஒவ்வொரு ஆண்டும் மார்ச் திங்கள் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் அனைத்து மகளிர்க்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களை போற்றிடும் வகையில் நம் நாட்டைத் தாய் திருநாடு என்றும், மொழியை தாய்மொழி என்றும், நதிகளுக்கு பெண் பெயர்களையும் வைத்து, நாம் மகிழ்கிறோம். 

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் கோயம்புத்தூர் மாநகரமும், பெண்களுக்கான பாதுகாப்பான பெருநகரங்களின் பட்டியலில் சென்னை பெருநகரமும் இடம்பெற்றிருப்பது, பெண்களின் பாதுகாப்பில்  தமிழக  அரசு மிகுந்த அக்கறை கொண்ட அரசு என்பதை மீண்டும் மெய்ப்பித்து இருக்கின்றது. தங்கள் வாழ்வில் எதிர்வரும் இடர்களை அஞ்சாமல் உறுதியுடன் எதிர்கொண்டு, அவற்றை வெற்றிப்படிகளாக்கி, இருளை நீக்கும் ஒளிவிளக்காக பெண்கள் உலகில் உயர்ந்து விளங்கிட வேண்டும் என்று வாழ்த்தி, எனது மகளிர் தின நல்வாழ்த்துகளை  தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!