`தமிழுக்கு எதிராகப் பெரியார் பேசியிருக்கிறார்’ - ஹெச்.ராஜா! | h.raja talks about periyar statement

வெளியிடப்பட்ட நேரம்: 10:17 (08/03/2018)

கடைசி தொடர்பு:11:04 (08/03/2018)

`தமிழுக்கு எதிராகப் பெரியார் பேசியிருக்கிறார்’ - ஹெச்.ராஜா!

பெரியார் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, பெறும் சர்ச்சையில் சிக்கியுள்ள பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, மீண்டும் பெரியார் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

ஹெச்.ராஜா

 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, ''எல்லா விதத்திலும் தமிழ் என்ற பெயரே இருக்கக் கூடாது என்பதற்காக, தமிழ் மக்கள்மீது திணிக்கப்பட்ட சொல்தான் திராவிடம் என்பது. இதை மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பெரியார்

அதுமட்டுமல்லாமல், 'தமிழ் என்ற சனியனே இருக்கக் கூடாது' என்று ஈ.வெ.ரா பேசியதற்கும் தகுந்த ஆதாரம் இருக்கிறது. இந்த உண்மைகளை மக்களிடம் நாம் எடுத்துச் சொல்லும்போது, மக்களிடம் தாக்கம் ஏற்படுகிறது. இதையெல்லாம் நான் புரிந்துகொண்டதற்காக மற்றவர்கள் வசைபாடுகிறார்கள்'' என்று பேசினார். 

`திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டிருக்கிறது. நாளை, தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை உடைக்கப்படும்' எனத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார், ஹெச்.ராஜா. அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பொதுமக்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும், சிலை உடைப்புச் சம்பவங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி, தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.