வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (08/03/2018)

கடைசி தொடர்பு:13:40 (08/03/2018)

'சிறையில் அடைக்கப்படுவது உறுதி'- ஹெச்.ராஜாவை எச்சரிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்

''தமிழைக் கொச்சைப்படுத்தி வன்முறையைத் தூண்ட நினைத்தால், ஹெச்.ராஜா சிறையில் அடைக்கப்படுவது உறுதி'' என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். 

ஜெயக்குமார்

சிலை உடைப்பு தொடர்பான ஃபேஸ்புக் சர்ச்சை ஓய்வதற்குள், மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஹெச்.ராஜா. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தமிழ் மக்கள்மீது திணிக்கப்பட்ட சொல்தான் திராவிடம். தமிழ் என்ற சனியனே இருக்கக் கூடாது என ஈ.வெ.ரா. பேசியதற்கு தகுந்த ஆதாரம் இருக்கிறது'' என்று பேசினார். இதனால், மீண்டும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில், இவர் பேசிய கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘தமிழ் மொழியைச் சனியன் என்று ஈ.வெ.ரா. சொன்னதாக எந்த ஆதாரமும் இல்லை. தமிழைக் கொச்சைப்படுத்தி வன்முறையைத் தூண்ட நினைத்தால், ஹெச்.ராஜா சிறையில் அடைக்கப்படுவது உறுதி'' என எச்சரித்துள்ளார்.