போலீஸ்மீது இருந்த மரியாதை முற்றிலும் குறைந்துவிட்டது! டி.டி.வி.தினகரன் 

''காவல்துறை மீது மக்களுக்கு இருந்த மரியாதை குறைந்துவிட்டது. அரசு மீதும் நம்பிக்கை இல்லை'' என்று, திருச்சியில் போக்குவரத்துக் காவல்துறையினரால் கர்ப்பணிப்பெண் உயிரிழந்த  சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் டி.டி.வி.தினகரன்.
 

டிடிவி தினகரன்

சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜி.சுப்பிரமணியன்  இல்லத் திருமண விழாவையும், பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள  விருதுநகர் மாவட்டத்துக்கு நேற்று மாலை வருகை தந்த டி.டி.வி.தினகரன், பல ஊர்களுக்கும் சென்றவருக்கு  நள்ளிரவு வரை  பல இடங்களிலும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இன்று காலை ராஜபாளையத்தில்  செய்தியாளர்களிடம் பேசும்போது, ''திருச்சியில் நடந்த காவல்துறையின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. காவல்துறை, ஆளும்கட்சியின் ஏவல் துறையாக செயல்படுகிறது. காவல்துறை மீது மக்களுக்கு  இருந்த மரியாதை முற்றிலும் குறைந்துவிட்டது. அரசு மீதும்  மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அம்மா இருக்கும்போது காவல்துறை, அவர் கட்டுப்பட்டில் இருந்தது. தற்போது ஆட்சியில் தலைமை சரியில்லாததால்  இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன'' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!