உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் உஷா குடும்பத்துக்கு 7 லட்ச ரூபாய் நிவாரணம்..!

திருச்சியில் காவல் ஆய்வாளர் தாக்கி உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் உஷாவின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு 7 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற தம்பதியை விரட்டிச் சென்ற காவல் ஆய்வாளர், இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்தார். வண்டியிலிருந்து கீழே விழுந்த கர்ப்பிணிப் பெண் உஷாவின் மீது பின்னால் வந்துகொண்டிருந்த வேன் ஏறியது. அதனால், சம்பவ இடத்திலேயே உஷா பலியானார். அதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உஷாவின் குடும்பத்தினருக்குக் காவல்துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், உயிரிழந்த உஷாவின் குடும்பத்துக்குத் தமிழக அரசு 7 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. உஷாவின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!