வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (08/03/2018)

கடைசி தொடர்பு:17:50 (08/03/2018)

`ரூ.10 கோடி மதிப்பிலான அரசு நிலம் ஆக்கிரமிப்பு!’ - அரசியல் பிரமுகர்கள் கைது

கேளம்பாக்கம் அருகே ரூ.10 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு தொடர்பாகத் தி.மு.க மற்றும் வி.சி.க முன்னாள் பிரமுகர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அருகே தையூர் ஊத்துகட்ட அம்மன் கோயில் தெரு சின்னம்மா நகர் பகுதியைச் சேர்ந்த விடுதலை
சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் தங்கவேல் மற்றும் கழிப்பட்டூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த தி.மு.க-வின் முன்னாள் பிரமுகர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் தையூர் பகுதிக்கு உட்பட்ட பலகோடி மதிப்பிலான அரசு நிலங்களை அபகரிப்பதாகக் கூறி தையூர் கிராம நிர்வாக அதிகாரி மேகநாதன் கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.

அதன் அடிப்படையில், இன்று கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி, அரசு நிலத்தை அபகரித்தது தொடர்பாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். இந்த இருவரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.