ஹெச்.ராஜா சொல்வது அபத்தம்'- ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் கூட்டாகக் கண்டனம்

பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்ட ஹெச்.ராஜாவை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் வன்மையாகக் கண்டித்துள்ளனர். 

ஒ.பி.எஸ் - இ.பி.எஸ்

அதிமுக சார்பில் மகளிர்தின விழா இன்று, அதிமுக தலைமை கழகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய, முதல்வர் பழனிசாமி, பெரியார் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம். அதனால், தலைவர்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும். மேலும், தலைவர்களின் சிலைகளைச் சேதப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதா வழியில் சிறப்பான ஆட்சியைத் தொடர்ந்து வருகிறோம். தமிழக அரசியலில் வெற்றிடம் என்பதே கிடையாது. ஏசிஎஸ் கல்லூரி விழாவில் சைதை துரைசாமி பேசியது அவரின், தனிப்பட்ட கருத்து என்றார். இவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பெரியார் குறித்து முகநூலில் தனது உதவியாளர்தான் பதிவுசெய்தார் என்று ஹெச்.ராஜா சொல்வது அபத்தமானது. அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தெரிவித்தார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!