நூறு வயதைக் கடந்த பெண்களிடம் ஆசிபெற்று மகளிர் தினத்தைக் கொண்டாடிய கல்லூரி மாணவிகள்!

100 வயதைத் தாண்டிய பெண்களை அழைத்து அவர்களுடன் வித்தியாசமாகப் பெண்கள் தினத்தைக் கொண்டாடிய கல்லூரி மாணவிகள்.

ஐ.நா. சபை ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்துக்கு ஒரு கருத்தை வலியுறுத்தி, அதன் அடிப்படையில் மகளிர் தின விழா
கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுகான கருத்து, "முன்னேற்றத்துக்கு அழுத்தம் கொடு" என்பதாகும். இளையோர்
முன்னேற வேண்டுமானால், நம்மைப் பெற்றெடுத்த தாய் தந்தையரையும், நம்முடன் வாழும் மூத்த பெரியோரையும் அன்புடன்
பராமரித்துப் போற்ற வேண்டும்.இந்த வகையில் தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் படிக்கும் பெண்கள் தங்கள் குடும்பத்தை சார்ந்த 100 வயதைத் தாண்டிய பெண்களை அழைத்து வந்து கௌரவித்து மகளிர் தின விழாவைக் கொண்டாடினர்.

தாம்பூலம், மஞ்சள், குங்குமம், பூ போன்ற மங்கலப் பொருள்களைத் தந்து பெரியோர்களை அணிவகுத்து அழைத்துச் சென்று அவர்களின் பாதங்களை நீரால் தூய்மைப்படுத்தி பாதபூஜை செய்து ஆசி பெற்றனர். தம் வாழ்வின் அனுபவங்களையும் சுவாரஸ்யங்களையும் வாழ்க்கைப் பாடங்களையும் பெரியோர்கள் மாணவிகளிடம் பகிர்ந்துகொண்டனர். ஆயிரம் பிறை கண்ட  அப்பெண்களுக்கு `யோகிணி’ (தெய்வப் பெண்) என்னும் விருதை வழங்கி கவுரவித்தனர். இந்த மகளிர் தினத்தில் மட்டுமல்லாது அனுதினமும் மகளிரைப் போற்றுவோம்! நாட்டின் நல்ல எதிர்காலத்துக்கு வலுசேர்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!