`ஹெச்.ராஜா வருத்தத்துக்குப் பிறகும் பெரிதுபடுத்துவது அரசியல்' - சொல்கிறார் டி.டி.வி.தினகரன்

''குடும்ப ஆட்சிக்கு எதிராகத் தர்மயுத்தம் நடத்துவதாகச் சொன்ன ஓ.பன்னீர்செல்வத்தின்  குடும்பக் கட்டுப்பாட்டில்தான் தேனி மாவட்டமே உள்ளது'' என்று கிண்டலடித்தார் டி.டி.வி.தினகரன்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தந்தை பெரியார் பற்றிய ஹெச்.ராஜா கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது. அதேநேரம், ராஜா வருத்தம் தெரிவித்த பிறகும் அதைப் பெரிதுபடுத்துவது அரசியல் நோக்கம் கொண்டது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது. பெரியார் சிலை பற்றி ராஜா சொன்ன கருத்துக்கு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டி முதல்வர் கண்டிக்கவில்லை. காவிரி போன்ற பொதுப் பிரச்னைகளில் அனைத்துக் கட்சிகளுடன் சேர்ந்து செயல்படுவோம். ஆனால் தமிழகத்தில் பி.ஜே.பி-யை எதிர்க்க பிற கட்சிகளுடன் இணைந்து செயல்படக்கூடிய அளவுக்கு பி.ஜே.பி ஒன்றும் பெரிய கட்சி அல்ல.

தினகரன்


திருவெறும்பூர் உஷா மரணமடைந்த விஷயத்தில், காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதற்காக ஒட்டு மொத்த காவல்துறையைக் குறை கூற முடியாது. அவர்களும் தாய் வயிற்றில் பிறந்தவர்கள்தான். தேனியில் நடுநிலையோடு செயல்பட்ட டி.எஸ்.பி-யை  என்னுடைய ஆதரவாளர் என நினைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். குடும்ப ஆட்சிக்கு எதிராகத் தர்மயுத்தம் நடத்துவதாகச் சொன்ன பன்னீரின் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில்தான் தேனி மாவட்டமே உள்ளது'' என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!