`பாலேஸ்வரம் கருணை இல்லத்தின் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை’ - உயர் நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தின் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. உரிய அனுமதி பெற்று இயங்கி வரும் இல்லத்தை ஏன் மூடவேண்டும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாலேஸ்வரம் கருணை இல்லம்

காஞ்சிபுரம் மாவட்டம், பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் முதியோர் கருணை இல்லத்தில் ஏற்பட்ட தொடர் சர்ச்சை காரணமாக அங்கிருக்கும் முதியோர்களை அரசு உதவிபெறும் வேறு இல்லங்களுக்கு மாற்ற மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டார். இதையடுத்து காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து அங்கிருப்பவர்களை படிப்படியாக வேறு இல்லங்களுக்கு மாற்றினார்கள். உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 96 பேரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அந்த இல்லத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என விளக்கம் கேட்டு காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜீவ்  நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து கருணை இல்லத்தின் நிர்வாகி தாமஸ் சென்னை உயர்நீதிமன்றதில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ‘அரசு அனுமதி பெற்று இயங்கி வரும் தொண்டு நிறுவனத்தை ஏன் மூட வேண்டும்?’ என கேள்வி எழுப்பினார். மேலும், கருணை இல்லத்தின் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்ததுடன், இதுதொடர்பாக தமிழக அரசு வரும் 23-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!