''பெண் குழந்தை சுமையல்ல..!'' - நெகிழ்ந்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி

''பெண் குழந்தை சுமையல்ல. ஆண் குழந்தைகளைப்போல பெண் குழந்தைகளும் தரமான கல்வி பெற வேண்டும்'' என்று பிரதமர் மோடி பேசினார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜூனுவில் நடந்த சர்வதேச மகளிர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஊட்டச்சத்து இயக்கம், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் போன்றத் திட்டங்களைத் தொடங்கிவைத்தார். ராஜஸ்தான் முதல்வர்  வசுந்தரா ராஜே முன்னிலை வகித்தார். அப்போது, ''பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் பிரதமரின் முயற்சிகளுக்கு ராஜஸ்தான் எப்போதும் ஆதரவளிக்கும்'' என்று கூறினார்.

பிரதமர் மோடி பேசுகையில், ''பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கத்தை விரிவுபடுத்துவதால், பாலின அடிப்படையில் பாகுபாட்டுக்கு இனி இடமில்லை. ஆண் குழந்தைகளைப் போல பெண் குழந்தைகளும் தரமான கல்வியைப் பெற  வேண்டும். பெண் குழந்தை ஒரு சுமை அல்ல. பெண் குழந்தைகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதுடன், நாட்டுக்குப் பெருமையையும் புகழையும் பெற்றுத்தருகிறார்கள். குழந்தைகளுக்கு முறையான ஊட்டச்சத்தை வழங்க வேண்டியது அவசியம். இந்திரதனுஷ் இயக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையில் மிகச் சிறப்பான ஆக்கபூர்வ மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!