கடன் நெருக்கடியால் விசைத்தறி உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்!

திருப்பூர் அருகே, கடன் நெருக்கடியால் விசைத்தறி உரிமையாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

விசைத்தறி

திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்தவர், விசைத்தறி உரிமையாளர் சம்பத். இவர், தன்னுடைய தொழிலுக்காக கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கடன் பெற்றிருக்கிறார். ஆனால், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், வங்கிக் கடனை சரியாக செலுத்த முடியாத சூழல் நேரிட்டிருக்கிறது. இதனால், அதிக கடன் நெருக்கடிக்கு ஆளான சம்பத், பெரும் மன உளைச்சலில் சிக்கித்தவித்துவந்தார். இந்நிலையில், கடனை அடைக்க வழி தெரியாமல், இன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அப்போது அதைப் பார்த்த வீட்டில் இருந்த மற்ற நபர்கள், சம்பத்தை உடனடியாக மீட்டு அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சையளித்து வருகிறார்கள். கடந்த சில வருடங்களாக, திருப்பூர் மற்றும் கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசைத்தறித் தொழிலில் ஈடுபட்டுவரும் பலர், இதுபோன்ற பிரச்னைகளைச் சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!