`தமிழ்நாட்டின் சிறந்த பெண் எம்.எல்.ஏ' - ஸ்ரீவில்லிப்புத்தூர் சந்திரபிரபாவை கௌரவப்படுத்திய கேரள அமைப்பு!

தமிழகத்தின் சிறந்த பெண் சட்டமன்ற உறுப்பினராக ஸ்ரீவில்லிப்புத்தூர் எம்.எல்.ஏ., சந்திரபிரபாவுக்கு, கேரளாவில் விருது வழங்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் ரோட்டரி கிளப், ஆண்டுதோறும் மகளிர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக, சிறந்த பெண் ஆளுமைகளுக்கு விருது வழங்கி கௌரவித்துவருகிறது. இந்த ஆண்டு மகளிர் தினக் கொண்டாட்டத்தின்போது, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் எம்.எல்.ஏ., சந்திரபிரபா முத்தையாவுக்கு, தமிழகத்தின் சிறந்த பெண் சட்டமன்ற உறுப்பினர் என்று அந்த அமைப்பு விருது வழங்கி கவுரவித்தது. 

சந்திரபிரபா

இதில் கலந்துகொண்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ., சந்திரபிரபா, தமிழகத்தில் சட்டமன்ற  உறுப்பினராகத்  தான் பணியாற்றுகிற அனுபவத்தையும், தமிழக அரசின் பல திட்டங்களைப் பற்றியும் விரிவான உரை நிகழ்த்தினார். இதேபோல, சிறந்த நடிகைக்கான விருதை நடிகை ராதாவுக்கு வழங்கினர். தமிழகத்தில் நீண்டகாலமாக நடித்து புகழ்பெற்றதற்காக இந்த விருது அளிக்கப்பட்டது. ''நான் பிறந்தது கேரளாவாக இருந்தாலும் வளர்த்தது தமிழகம். தமிழகத்தில் இருந்து வெற்றிபெற்றதற்கு, எங்களது மக்கள் பெருமையாக நினைக்கின்றனர். மகளிர் தினத்தை ஒரு நாள் மட்டும் கொண்டாடினால் போதாது, அனைத்து நாள்களும் கொண்டாட வேண்டும். சுயமாரிதைதான் முக்கியம். அது, தமிழகத்தில் அதிகம் கிடைத்தது. மூச்சுள்ளவரை தமிழகத்தை மறக்க மாட்டேன்'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!