`கடவுளே உனக்கு இரக்கம் இல்லையா' - உஷாவின் இறுதி ஊர்வலத்தில் கலங்கிய கணவர் | trichy usha's Funeral Procession started

வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (09/03/2018)

கடைசி தொடர்பு:11:31 (09/03/2018)

`கடவுளே உனக்கு இரக்கம் இல்லையா' - உஷாவின் இறுதி ஊர்வலத்தில் கலங்கிய கணவர்

உஷா

 

திருச்சியில், காவல் ஆய்வாளர் தாக்கி உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் உஷாவின் இறுதிச்சடங்கு, திருச்சி கே.கே.நகர் சுந்தர் நகர் பகுதியிலிருந்து தொடங்கியது. 

உஷா

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற தம்பதியை விரட்டிச் சென்ற காவல் ஆய்வாளர், இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்தார். வண்டியிலிருந்து கீழே விழுந்த கர்ப்பிணிப் பெண் உஷாவின் மீது பின்னால் வந்துகொண்டிருந்த வேன் ஏறியது. அதனால், சம்பவ இடத்திலேயே உஷா பலியானார். இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் உஷாவின் உடல் பிரேதப் பரிசோதனைசெய்யப்பட்டு, உஷாவின் தாய்வழி உறவினர்களிடம் தரப்பட்டது. 

உஷா கணவர்

7 கி.மீ ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும் உஷாவின் உடலுக்கு அஞ்சலிசெலுத்த, சாலையின் இரு புறங்களிலும் மக்கள் திரளாக நின்று, தங்களது அஞ்சலியைச் செலுத்திவருகின்றனர். இறுதி ஊர்வலத்தின்போது, ‘கடவுளே உனக்கு இரக்கம் இல்லையா’ என்று உஷாவின் கணவர் கண்ணீருடன் கதறிஅழுதார். 

தமிழிசை

திருச்சி கே.கே. நகர் சுந்தர் நகரில் உள்ள உஷா உடலுக்கு பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை அஞ்சலிசெலுத்தினார். உஷாவின் உடலுக்கு மரியாதைசெலுத்தவும், உஷாவின் கணவர் மற்றும் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறவும், பி.ஜே.பி சார்பில் வானதி சீனிவாசன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேற்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.