வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (09/03/2018)

கடைசி தொடர்பு:15:00 (09/03/2018)

தேர்வு எழுத வந்த ப்ளஸ் டூ மாணவனுக்கு நடந்த விபரீதம்!

ப்ளஸ் டூ தேர்வு எழுத வந்த மாணவரை சக மாணவர்கள் கத்தியால் குத்திய சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கூடம்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள  திருவாதவூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ பயிலும் மாணவர்களுக்கிடையே முன்விரோதம் காரணமாக, பள்ளி வளாகத்தில் அமர்ந்திருந்த அர்ஜூன் என்ற மாணவனை அதே பள்ளியில் பயிலும் கார்த்தி, சரவணன் ஆகிய இருவர் கத்தியால் குத்தியுள்ளனர். இதனால், அர்ஜூனின் விரல்கள் துண்டாயின.

இதைத் தொடர்ந்து, ரத்தக்காயங்களுடன் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அர்ஜூன் கொண்டுசெல்லப்பட்டார். இதுகுறித்து மேலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த மாணவர்களுக்கிடையே பல மாதங்களாகத் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், வகுப்பறையில் பெஞ்சில் யார் அமர்வது என்ற போட்டி இவர்களிடையே பெரும் விரோதமானதாகவும் கூறப்படுகிறது. எனினும், இதுதான் பிரச்னையா இல்லை காதல் விவகாரமா என்று காவல்துறையினர் விசாரிக்கின்றனர். இந்நிலையில், எஸ்.பி., மணிவண்ணன் சம்பவம் நடந்த பள்ளியில் ஆய்வு செய்துவிட்டுச் சென்றார்.