கல்லூரி வாசலில் மாணவி குத்திக்கொலை! சென்னையில் பயங்கரம்

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவந்த மாணவி ஒருவர், இளைஞரால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலுள்ள பிரபலமான தனியார் கல்லூரியில் மதுரவாயலைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண் பி.காம் படிந்துவந்துள்ளார். அந்த மாணவி இன்று கல்லூரி வாசலில் நின்றுகொண்டிருந்தபோது, அவரை அழகேசன் என்ற இளைஞர் கத்தியால் சரமாரியாகக் குத்தினார்.

அதில் படுகாயமடைந்த மாணவி, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கத்தியால் குத்திய இளைஞரை, பொதுமக்கள் பிடித்து அடித்து காவல்துறையிடம் ஒப்படைந்தனர். அந்த இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இறந்த மாணவி அஸ்வினியின் தோழிகளிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். ஏற்கெனவே, அழகேசன்மீது அஸ்வினி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கில் மதுரவாயல் காவல்துறையினர் அழகேசன்மீது ஏற்கெனவே கைது நடவடிக்கை எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!