வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (09/03/2018)

கடைசி தொடர்பு:19:35 (09/03/2018)

`2 ரூபாய் முள்ளங்கியை 1,000 ரூபாய்க்குக் கேட்கிறார்கள்' - கொடுக்க மறுக்கும் விவசாயி

நடன மங்கை, விநாயகர் வடிவில் வயலில் விளைந்திருந்த முள்ளங்கியைப் பார்ப்பதற்காகக் கிராம மக்கள் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்துவருகின்றனர்.

விவசாயி முள்ளங்கி

அரியலூர் மாவட்டம் வாரணவாசி, ஆத்தூர், பார்ப்பனச்சேரி, தா.பழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முள்ளங்கி சாகுபடி அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது முள்ளங்கி அறுவடைசெய்யப்பட்டு வருகின்றது. முள்ளங்கி நல்ல விளைச்சல் தந்திருந்தாலும் விவசாயிகளுக்குப் போதிய விலை இல்லாததால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கிலோ முள்ளங்கி 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அறுவடை செய்யக்கூடிய ஆட்கள் கூலிக்குக்கூட கட்டுப்படியாகாத நிலையே உள்ளது.

முள்ளங்கி

இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருமானூர் அருகேயுள்ள திருமழப்பாடி அன்பு கணேசன் என்பவரது வயலில் பயிரிடப்பட்டிருந்த முள்ளங்கி அறுவடை செய்யப்பட்டு வருகின்றது. அப்போது முள்ளங்கியைப் பிடுங்கியபோது, அதில் ஒன்று நடன மங்கை போலவும், ஒருபுறம் விநாயகர் போலவும் காட்சியளிக்கும் விதமாக விளைந்திருந்தது. இது பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இதைப் பார்ப்பவர்கள் அந்த ஒரு முள்ளங்கியை ஆயிரக்கணக்கில் விலைபேசி வருகின்றனர். ஆனால், வித்தியாசமான முறையில் இருக்கும் முள்ளங்கியைக் கொடுக்க மனம் இல்லாமல் விவசாயி மறுத்துவருகிறார். நடன விநாயகர் முள்ளங்கையைக் காண்பதற்காக கிராம மக்கள் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்து வருகின்றனர்.