பலத்த பாதுகாப்புடன் சொத்துகளைப் பார்வையிட்ட ரவிச்சந்திரன்!

மதுரையில் உள்ள சொத்துகளை பார்வையிட பலத்த பாதுகாப்புடன் ரவிச்சந்திரன் வந்தார்.

ரவிச்சந்திரன் மதுரை


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் ரவிச்சந்திரன், கடந்த 5ம் தேதி பரோல் கிடைத்து பலத்த போலீஸ் பாதுக்காப்புடன் மதுரை மத்திய சிறையிலிருந்து சொந்த ஊரான அருப்புக்கோட்டைக்குச் சென்றார். அவருடைய வீட்டுக்கு ஒரு டி.எஸ்.பி தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில்  எம்.எல்.ஏ.தனியரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு ஆகியோர் சந்தித்துப் பேசி வந்தனர்.  இந்த நிலையில் அவருடைய குடும்பச் சொத்துகள் பாகப்பிரிவினை சம்பந்தமாகவும், மீனாட்சியம்மன் கோயிலில் வழிபட வேண்டும் என்ற கோரிக்கைக்காகவும் அவர் இன்று காலை மதுரை அழைத்து வரப்பட்டார். 

மதுரை கே.கே.நகர் பகுதியில் பூர்வீக சொத்தை பார்வையிட்டுவிட்டு, சிவகங்கை சாலையிலுள்ள நிலம் ஒன்றையும் பார்த்தார். அதன் பின்பு அவருடைய வழக்கில் ஆஜராகி வருகிற மூத்த வழக்கறிஞர் லஜபதிராயைச் சந்திக்க சென்றார். அங்கு அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். அதன் பின்பு மதிய உணவு சாப்பிட்டவர், அடுத்ததாக மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றவர் அங்கு வழிபட்டதும், மாலை ஆறு மணிக்குள் அருப்புக்கோட்டைக்குச் செல்ல உள்ளார். டி.எஸ்பி. தனபால் தலைமையில் விருதுநகர் மாவட்ட போலீஸூடன், மதுரை மாவட்ட போலீஸும் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!