வாகன ஓட்டிகளை நெகிழவைக்கும் டிராஃபிக் இன்ஸ்பெக்டர்

பெங்களூருவின் பரபரப்பான பகுதிகளில் ரிச்மான்ட் சர்க்கிளும் ஒன்று. இங்கு விடுப்பே எடுக்காமல் தினமும் காலை 7 மணிக்கு நாகேஷ் ராவ் என்கிற டிராஃபிக்  இன்ஸ்பெக்டர் ஆஜராகி விடுவார்.  போக்குவரத்து மிகுந்த இந்தப் பகுதியில் நாகேஷ் ராவ் பொறுப்புடன் பணியாற்றினார். நாகேஷ் ராவின் 'சின்ஸியர்' அந்தப் பகுதி மக்களுக்கு நன்கு வெளிச்சம். இங்கு ஏராளமான கல்லூரிகளும் பள்ளிகளும்  உள்ளன. இந்தப் பகுதிக்கு வரும் வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்திவிட்டு பாட்டில்களில் தண்ணீர் வாங்கி அருந்துவதை நாகேஷ் ராவ் பார்த்தார். வாகன ஓட்டிகளுக்கு உதவிடும் வகையில், அந்தப் பகுதியில் தண்ணீர் கேன்களை வாங்கி வைக்க முடிவு செய்தார். இது குறித்து உயர் அதிகாரி விஜிகுமாரிடம் கலந்து ஆலோசித்தார். சம்மதம் கிடைக்கவே அந்தப் பகுதியில் பணியாற்றும் டிராஃபிக் போலீஸார் அனைவரும் சேர்ந்து பணம் திரட்டி அங்கே தண்ணீர் பந்தல் வைத்தனர்.

இன்ஸ்பெக்டர்

நாகேஷ் ராவின் நல்லெண்ணத்தை அறிந்த அந்தப் பகுதி மக்கள் ரிச்மான்ட் சர்க்கிள் பகுதியில் சிமென்ட் திண்ணை கட்டித் தந்தனர். இதையடுத்து, நேற்று முதல் அங்கு தினமும் 25 லிட்டர் தண்ணீர் வைக்கப்படுகிறது. ஏராளமான மக்கள் தாகம் தணித்துச் செல்கின்றனர். நாகேஷ் ராவ் கூறுகையில், ''வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் தண்ணீர் குடித்து தாகம் தணித்துச் செல்வது மனதுக்கு மகிழ்வை தருகிறது. கோடை காலம் தொடங்கியிருப்பதால் கூடுதல் நீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்று பொறுப்புடன் கூறுகிறார். 

100 ரூபாய்க்கு ஆசைப்பட்டு உயிரைப் பறிக்கும் டிராஃபிக் போலீஸ் எங்கே... கைக்காசு போட்டு தண்ணீர் வழங்கும் டிராஃபிக் போலீஸ் எங்கே... எதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் !


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!