பள்ளி மாணவர்களுடன் பெண்கள் தினம் கொண்டாடிய எல்.ஐ.சி ஊழியர்கள்..!

சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதியை உலகெங்கிலும் உள்ள அரசுகள், அமைப்புகள், பெண்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடி மகிழ்கின்றனர். அந்த வகையில் ராமநாதபுரம் கே.கே.நகரில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சர்வேதச மகளிர் தின விழாவை கொண்டாடும் விதமாக அம்மாணவர்களுக்கு தேவையான பொருட்களை எல்.ஐ.சி.அலுவலக பெண் ஊழியர்கள் வழங்கி அசத்தினார்கள்.

பள்ளி மாணவர்களுக்கு மகளிர் தினவிழாவில் உதவிய எல்.ஐ.சி  பெண் ஊழியர்கள்

ராமநாதபுரம் எல்.ஐ.சி.அலுவலகப் பெண் ஊழியர்கள் சார்பாக ஆண்டு தோறும் சர்வதேச மகளிர் தின விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மகளிர் தின விழாவை கொண்டாடும் விதமாக ராமநாதபுரம் கே.கே.நகரில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான நோட்டு, புத்தகம், பென்சில், லஞ்ச் பாக்ஸ், பெட்ஷீட் உள்ளிட்டப் பொருட்களை இலவசமாக வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு எல்.ஐ.சி.ஊழியர் மஞ்சுளா தலைமை வகித்தார். பிரமேலதா,பிரியா சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.லிடியா சாந்தினி வரவேற்றார்.நிகழ்வில் எல்.ஐ.சி.அலுவலக ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.ஜெயசாந்தினி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை எல்.ஐ.சி.ஊழியர் சங்க கிளை செயலாளர் டி.முத்துப்பாண்டி செய்திருந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!